முகப்பு
இந்தியா

தமிழகம், கர்நாடகம், ஆந்திரத்தில் 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

நாட்டில், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் சுமார் 60 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:30 AM
வருமான வரித்துறை
பகிர்:


சென்னை: நாட்டில், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் சுமார் 60 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி உரிமையாளருக்குச் சொந்தமான குழுமம் உள்பட நான்கு குழுமங்களுக்குச் சொந்தமான இடங்களில் இன்று இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களிலும் கர்நாடகத்திலும் ஆந்திர மாநிலத்திலும் என 60 இடங்களில்  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அண்ணா நகரில் உள்ள நட்சத்திர விடுதி உரிமையாளர் வீடு, ஐயப்பன்தாங்கலில் உள்ள நட்சத்திர விடுதி என பல இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →