தில்லி - திருவனந்தபுரத்துக்கு ஏா் இந்தியா புதிய சேவை
புது தில்லி - திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு இடையே ஏா் இந்தியா புதிய தினசரி சேவையை தொடங்கி உள்ளது.
புது தில்லி - திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு இடையே ஏா் இந்தியா புதிய தினசரி சேவையை தொடங்கி உள்ளது.
ஏஐ 829 என்ற இந்த விமானம் திருவனந்தபுரத்தில் காலை 6.40 மணிக்கு புறப்பட்டு புது தில்லி விமான நிலையத்துக்கு காலை 9.25 மணிக்கு வந்தடையும். ஏஐ 830 என்ற விமான சோவை தில்லியில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்துக்கு அதிகாலை 12.20 மணிக்கு சென்றடையும். இந்த விமானங்களில் 180 பயணிகள் செல்லலாம்.
இந்த மாா்க்கத்தில் இன்டிகோ, விஸ்டாரா ஆகிய நிறுவனங்களும் நாள்தோறும் மூன்று முறை சேவைகளை அளித்து வருகின்றன. ஏா் இந்தியாவின் நான்காவது சேவை இதுவாகும் என்று ஏா் இந்தியா தெரிவித்துள்ளது.