முகப்பு
இந்தியா

பொதுத்தேர்வு அழுத்தம்: 12ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை!

தில்லியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருந்த மாணவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:32 AM
கோப்புப் படம்
பகிர்:


தில்லியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருந்த மாணவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தில்லியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

10ஆம் வகுப்புக்கு மார்ச் 21 வரைக்கும், 12ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 5ஆம் தேதி வரைக்கும் தேர்வு நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், தென்மேற்கு தில்லியில் வசித்துவரும் 18 வயது மாணவர் விஷ்ணு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தேர்வு அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவரின் தாயார் செவிலியராக பணியாற்றி வருகிறார். 

முழு கட்டுரையைப் படிக்க →