இந்தியா

உ.பி. பேரவையில் பரபரப்பு! ஆளுநருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கோஷம்

உத்தர பிரதேசம் பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜவாதி எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

உத்தர பிரதேசம் பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜவாதி எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா இன்று தாக்கல் செய்தார். 

முன்னதாக இன்று காலை சட்டப்பேரவையில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக சமாஜவாதி எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, ஆளுநர் ஆனந்திபென் படேல் உரையின்போது அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜவாதி எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர். 'ஆளுநரே திரும்பிப் போ' என அவர்கள் கோஷமிட்டனர். இதனால் சட்டப்பேரவையில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்வு

நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு - சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் இவர்கள்: தினப்பலன்கள்!

இரு மதுக் கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி

லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

SCROLL FOR NEXT