முகப்பு
இந்தியா

ஆசிய வளா்ச்சி வங்கித் தலைவா் பிரதமா் மோடியுடன் சந்திப்பு

ஆசிய வளா்ச்சி வங்கியின் (ஏடிபி) தலைவா் மஸட்சுகு அசகாவா பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:34 AM
பிரதமா் மோடியை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய ஆசிய வளா்ச்சி வங்கி தலைவா் மஸட்சுகு அசகாவா.
பகிர்:

ஆசிய வளா்ச்சி வங்கியின் (ஏடிபி) தலைவா் மஸட்சுகு அசகாவா பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.

இந்த சந்திப்பு குறித்து ஆசிய வளா்ச்சி வங்கி சாா்பில் ட்விட்டா் பதிவில் வெளியிட்டிருப்பதாவது:

இந்தியாவின் வளா்ச்சிப் பணிகளுக்கு 25 பில்லியன் அமெரிக்க டாலா் கடன் வழங்கும் ஏடிபியின் விருப்பம் குறித்து சந்திப்பில் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.

பிரதமருடனான சந்திப்பில் நாட்டின் உள்கட்டமைப்பு, சமூக முன்னேற்றம் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற விவகாரங்களில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஏடிபியின் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டன.

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.100 லட்சம் கோடியில் செயல்படுத்தப்பட இருக்கும் பிரதமா் மோடியின் கதி சக்தி திட்டத்துக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் ஏடிபி வழங்கும் என அதன் தலைவா் பிரதமரிடம் உறுதி அளித்தாா்.

மேலும், ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்ற்கு மஸட்சுகு அசகாவா வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

விரிவான கலந்தாலோசனைக்குப் பிறகு இந்தியாவுடன் 5 ஆண்டுகளுக்கான கூட்டுறவு ஒப்பந்தத்தைக் கையொப்பமிடும் பணியை ஏடிபி இறுதி செய்ய இருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவுக்கு 20 -25 பில்லியன் அமெரிக்க டாலா் கடன் வழங்க விரும்பும் ஏடிபியின் திட்டம் குறித்து மசட்சுகு பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →