சைபர் மோசடி கும்பலை பிடித்த காவல்துறைக்குக் காத்திருந்த அதிர்ச்சி 
இந்தியா

சைபர் மோசடி கும்பலை பிடித்த காவல்துறைக்குக் காத்திருந்த அதிர்ச்சி

மும்பையில் பல்வேறு சைபர் குற்றங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்தபோது காவல்துறையினருக்குக் கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

DIN

மும்பை: மும்பையில் பல்வேறு சைபர் குற்றங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்தபோது காவல்துறையினருக்குக் கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஒரு தனிநபரிடம் மோசடியாக பிரீமியம் கிரெடிட் கார்டு மற்றும் ஒரு கிளப்பில் உறுப்பினராக சேர்த்துவிடுவதாகக் கூறி ரூ.9.8 லட்சம் மோசடி செய்த வழக்கில் இந்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த கும்பலுக்கு, இதுவரை மும்பையில் நடந்த 32 சைபர் மோசடி வழக்குகளில் தொடர்பிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். பணக்கார தனிநபர்களை குறி வைத்து இந்த கும்பல் செயல்பட்டுள்ளதும், இவர்கள் இதுவரை வெளிநாடுகளைச் சேர்ந்த சிம்கார்டு உள்பட 1600 சிம்கார்டுகளை பயன்படுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் விலை உயர்ந்த கார்களை வாங்கியவர்களின் விவரங்களை சேகரித்து அதன் மூலம் அவர்களது சொத்து விவரங்கள் தெரிந்து கொண்டு இந்த மோசடி கும்பல் கைவரிசையை காட்டியிருக்கிறது.

ஒரு தனிநபரை தேர்வு செய்துவிட்டால், அவரை தொடர்பு கொண்டு, பிரீமியம் கிரெடிட் கார்டு மற்றும் கிளப்பில் உறுப்பினர் வாய்ப்பு வழங்குவதாகப் பேசுவார்கள். ஒருவர் தனக்கு ஆர்வமிருப்பதாகக் காட்டிவிட்டால் போதும். அவரது விவரங்களைப் பெற்றுவிடுவார்கள். மோசடியாளர்கள் இதற்காகப் பயன்படுத்துவது எல்லாமே விலை உயர்ந்த கார்கள், ஐஃபோன்கள்தான். அதனால், அவர்கள் மீது தனிநபருக்கு எந்த சந்தேகமும் வராது. 

மேலும், தங்களது விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றால், ஐஃபோனில்தான் செய்ய முடியும் என்று சொல்வார்கள். எனவே, தனிநபரின் சிம் கார்டை எடுத்து அந்த ஐபோனில் போட்டு விண்ணப்பத்தை பதிவு செய்து, வங்கி விவரங்களை அளிப்பார்கள்.

அதில் ஏற்கனவே இருக்கும் மோசடி செயலிகள் வாயிலாக, தனிநபரின் வங்கித் தகவல் ஓடிபி என அனைத்தையும் மோசடியாளர்கள் பெற்று, அதன் மூலம் விலை உயர்ந்த பொருள்களை வாங்கி அதனை விற்று பணம் சம்பாதிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இவர்களில் 3 பேர் எம்சிஏ பட்டதாரிகள், மூளையாக செயல்பட்டவர் மெக்கானிக்கல் பொறியாளர், தேடப்படும் முக்கிய குற்றவாளி ஐஐடியில் இடைநின்றவர் என்பது தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜல்லிக்கட்டு வா்ணனையாளா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிக்கை

10, 12 வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு! முழு விவரம்!

எனது தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை! தலைமை நீதிபதி

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT