இந்தியா

மீண்டும் பேரவைக்கு வரமாட்டேன்.. இதுவே கடைசி: முன்னாள் முதல்வர் பேச்சு

DIN

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் இதுவே தனது கடைசி உரை என்று நா தழுதழுத்தக் குரலில் உருக்கமாக உரையாற்றினார் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான பிஎஸ் எடியூரப்பா.

கர்நாடகத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நேற்று பேசிய எடியூரப்பா இவ்வாறு கூறியிருந்தார்.

சட்டப்பேரவையில் நேற்று எடியூரப்பா பேசுகையில், இதுவே தனது பேரவையின் கடைசி உரை என்றும், வரும் பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்றும், தனது ஷிகாரிபுரா தொகுதியில் தனக்குப் பதிலாக மகன் பிஒய் விஜயேந்திரா போட்டியிடுவார் என்றும் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

பிஎஸ் எடியூரப்பா கடந்த 1983ஆம் ஆண்டு முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்டார். அவர் பேரவை உறுப்பினராக இதுவரை 6 முறை தேர்வு செய்யப்பட்டவர்.

இடையில், 1999ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் மட்டும் அவர் தோல்வியை தழுவியிருந்தார். இவர் நான்கு முறை முதல்வராகஇருந்தவர். 2019ஆம் ஆண்டு சிறந்த எம்எல்ஏ விருதையும் வென்றவர். 

நேற்று அவர் பேசுகையில், இது என் கடைசி பேரவை உரை என்று நெகிழ்ச்சியோடு பேசியிருந்தார். அப்போது, பேரவைத் தலைவர் விஷ்வேஷ்வர் ஹெக்டே குறுக்கிட்டு, நீங்கள் இந்தப் பேரவைக் கூட்டத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமையும் உரையாற்ற வேண்டும் என்று நாங்கள் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம் என்றும், எனவே, இது உங்கள் கடைசி உரையல்ல என்றும் கூறியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

‘சிசிடிவி ஆய்வில் உண்மை வெளியே வரும்’ : ஸ்வாதி மாலிவால்!

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT