இந்தியா

திரைத்துறைக்கு சலுகைகளை அளித்துள்ள உ.பி. அரசு!

உத்தரப் பிரதேசத்தில் திரைத்துறைக்கு அந்நாட்டு அரசு புதிய சலுகையை அறிவித்துள்ளது. 

DIN

உத்தரப் பிரதேசத்தில் திரைத்துறைக்கு அந்நாட்டு அரசு புதிய சலுகையை அறிவித்துள்ளது. 

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், 

நொய்டாவில் ரூ. 10,000 கோடி செலவில் திரைப்பட நகரம் தயாராகி வருகிறது. இதன் உள்ளே வருபவர்கள் தங்களின் 80 சதவீத பணிகளை முடிக்கும் வகையில் இது அமைய உள்ளது. அந்தவகையில், நொய்டாவில் திரைப்பட நகரத்தில் உருவாகும் படங்களுக்கும் புதிய திரைப்படக் கொள்கை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவாதி, பிரஜ், பண்டேலி, போஜ்புரியில் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டால் திரைப்படக் கொள்ளையில் 50 சதவீத மானியமும், ஆங்கிலம், ஹிந்தி அல்லது பிற மொழிகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கும் திரைப்படத் தயாரிப்பு செலவில் 25 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

மாநிலத்தில் திரைப்படங்கள் தொடர்பான ஸ்டுடியோ அமைத்தல், புகைப்பட ஆய்வகங்கள் அமைப்பதற்கும் 25 சதவீத தொகை அல்லது ரூ.50 லட்சம் மானியமாக அளிக்கப்பட உள்ளது. 

பூர்வாஞ்சல், விந்தியாச்சல் மற்றும் புந்தேல்கண்ட் ஆகிய பிராந்தியத்தில் ஸ்டுடியோக்கள் மற்றும் ஆய்வுக்கூடங்கள் அமைக்கும்பட்சத்தில், அந்தத் தொகை 35 சதவீதமாகவும் அல்லது ரூ.50 லட்சமாகவும் வழங்கப்படும். 

மாநிலத்தில் எடுக்கப்படும் திரைப்படம் அல்லது தொடர்களின் மொத்த செலவில் பாதித்தொகை அல்லது ரூ. 1 கோடி வரை தயாரிப்பாளர்களுக்கு உ.பி.அரசு அளிக்க உள்ளதாக முதல்வர் யோகி தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

SCROLL FOR NEXT