FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வாய்ப்பு கொடுங்கள்... ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம்: அமித் ஷா

எடியூரப்பாவுக்கு வாய்ப்பு கொடுங்கள், ஊழல் இல்லாத அரசாங்கம் அமைய நாங்கள் உத்திரவாதம் அளிக்கிறோம் என பாஜக உள் துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார். 

7 பிப்ரவரி 2024, 12:05 pm IST
உள் துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப் படம்)
பகிர்:

எடியூரப்பாவுக்கு வாய்ப்பு கொடுங்கள், ஊழல் இல்லாத அரசாங்கம் அமைய நாங்கள் உத்திரவாதம் அளிக்கிறோம் என பாஜக உள் துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார். 

கர்நாடகத்தில் இந்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே கர்நாடகத்துக்கு வருகை புரிந்த உள் துறை அமைச்சர் அமித் ஷா பல்லாரி தொகுதியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், கர்நாடக மக்கள் எடியூரப்பாவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால், கர்நாடகத்தில் ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்வோம். காங்கிரஸ், ஜனதா தளம் ஆகியவை குடும்பக் கட்சிகள். அவர்களால் பொதுமக்களின் வளர்ச்சிக்கும் ஏழை மக்களின் வாழ்வாதார மாற்றத்துக்கும் பணிபுரிய இயலாது. 

Advertisement

Advertisement

கர்நாடகத்தின் பெரும்பான்மை வெற்றிக்கு பாஜக போராடி வருகிறது. கர்நாடக மக்கள் இந்த நிலத்தில் மீண்டும் தாமரையை மலர வைக்க வேண்டும். ஒரு பக்கம் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி, மறுபுறம் ராகுல் காந்தியின் கூட்டம். மக்கள் சிந்திக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments