முகப்பு
இந்தியா

எனது கடைசி மூச்சு வரை கட்சி வளர்ச்சிக்காக போராடுவேன்: எடியூரப்பா

மூத்த பாஜக தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான பிஎஸ் எடியூரப்பா, பேரவையில் இன்று தனது நிறைவு உரையை ஆற்றினார். அப்போது, எனது கடைசி மூச்சு வரை கட்சி வளர்ச்சிக்காகப் போராடுவேன் என்றார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:35 AM
எனது கடைசி மூச்சு வரை கட்சி வளர்ச்சிக்காக போராடுவேன்: எடியூரப்பா
பகிர்:

பெங்களூரு: மூத்த பாஜக தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான பிஎஸ் எடியூரப்பா, பேரவையில் இன்று தனது நிறைவு உரையை ஆற்றினார். அப்போது, எனது கடைசி மூச்சு வரை கட்சி வளர்ச்சிக்காகப் போராடுவேன் என்றார்.

கர்நாடக பேரவையில் இன்று தனது நிறைவு உரையை ஆற்றினார் எடியூரப்பா. அப்போது, மாநில பேரவைத் தேர்தல்களில் இனி போட்டியிடப்போவதில்லை என்றும், எனது கடைசி மூச்சு வரை கட்சி வளர்ச்சிக்காகப் போராடுவேன் என்று கூறினார்.

இவ்வளவு தூரம் நான் பயணித்ததற்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம். ஆர்எஸ்எஸ்-இல் இருந்த போது எனக்குக் கிடைத்த பயிற்சிகளே, இந்த அளவுக்கு நான் உயர காரணமாக இருந்தது. மீண்டும் எந்த தேர்தலிலும் போட்டியிடக் கூடாது என்று முடிவெடுத்துள்ளேன். மாநிலத்தில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்காகப் பாடுபடுவேன் என்றார்.

ஷிகாரிபுரா மக்களை நான் எப்போதும் மறக்க மாட்டேன் என்றும், வரும் 27ஆம் தேதி எனக்கு 80 வயதாகிறது. பிரதமர் நரேந்திர மோடி எனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்கிறார். எனது பிறந்தநாள் அன்று, ஷிமோகா விமான நிலையம் திறக்கப்படவிருக்கிறது என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →