கோப்புப்படம் 
இந்தியா

சிறுதானிய உணவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் சிறந்த தரமான சிறுதானிய தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கான முக்கிய நடவடிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 

DIN


புதுதில்லி: இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் சிறந்த தரமான சிறுதானிய தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கான முக்கிய நடவடிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 

இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் சிறந்த தரமான சிறுதானியங்கள் தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கான முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் 15 வகையான சிறுதானியங்களின் தரத்தை மதிப்பிட எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ இந்தியா 8 தர அளவுருக்களை நிர்ணயித்து நல்ல தரமான சிறுதானியங்கள் கிடைப்பதை உறுதி செய்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் சிறந்த தரமான ஸ்ரீ அன்னா தயாரிப்புகளை (சிறுதானியங்களை) ஊக்குவிப்பதற்கான முக்கிய படி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT