முகப்பு
இந்தியா

வாழ்த்து பெறுகிறேன்! வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்: மு.க. ஸ்டாலின் 

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வாழ்த்து பெறுகிறேன்! வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:36 PM
கோப்புப்படம்
பகிர்:

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வாழ்த்து பெறுகிறேன்! வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், புதியதொரு விடியலில் புலர்ந்தது புத்தாண்டு! உடன்பிறப்புகள் - பொதுமக்கள் - நண்பர்கள் என காலை முதல் அன்பொழுக வாழ்த்துகளைப் பகிரும் நல்லுள்ளங்கள்! வாழ்த்து பெறுகிறேன்!

வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் அனைத்து வளங்களும் மகிழ்ச்சியும் வாழ்வில் பொங்க! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஆங்கிலப் புத்தாண்டான 2023ஆம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையொட்டி தமிழகம் உள்பட உலகின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாட்டங்கள் களைகட்டின என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →