கர்நாடக முதல்வரை நாய்க்குட்டியுடன் ஒப்பிட்ட சித்தராமையா
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மோடியின் பப்பி நாய்க்குட்டி போல் செயல்படுவதாக அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மோடியின் பப்பி நாய்க்குட்டி போல் செயல்படுவதாக அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது அவர் வெளிப்படுத்திய கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது.
இதையும் படிக்க | சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பிரதமர் நரேந்திர மோடியின் முன் பப்பி நாய்க்குட்டி போல இருப்பதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “15ஆவது ஊதியக் குழு பரிந்துரையின்படி கர்நாடக மாநிலத்திற்கு வழங்கவேண்டிய ரூ.5495 கோடி நிதியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்க மறுக்கிறார்” எனக் குற்றம்சாட்டினார்.
சித்தராமையாவின் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள பசவராஜ் பொம்மை நாய் நன்றியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.