இந்தியா

ஹிமாசல் அமைச்சரவை விரிவாக்கம்: 7 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

ஹிமாசல் அமைச்சரவை உறுப்பினர்களின் பதவியேற்பு விழா சிம்லாவில் உள்ள ராஜ்பவனில் இன்று நடைபெற்றது. முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகன் எம்எல்ஏ விக்ரமாதித்ய சிங் கேபினட் அமைச்சராக பதவியேற்றார். 

DIN

ஹிமாசல் அமைச்சரவை உறுப்பினர்களின் பதவியேற்பு விழா சிம்லாவில் உள்ள ராஜ்பவனில் இன்று நடைபெற்றது. முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகன்  விக்ரமாதித்ய சிங் கேபினட் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்

7 புதிய அமைச்சர்கள் டாக்டர் தானி ராம் ஷண்டில், சந்தர் குமார், ஹர்ஷ்வர்தன் சவுகான், ஜகத் சிங் நேகி, ரோஹித் தாக்கூர், அனிருத் சிங் மற்றும் விக்ரமாதித்ய சிங் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் இமாச்சல ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஹிமாசலில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. மாநிலத்தின் 15-ஆவது முதல்வராக நான்கு முறை காங்கிரஸ் எம்எல்ஏ-வான சுக்விந்தா் சிங் சுக்கு (58)  பதவியேற்றாா். 

மாநிலத்தின் துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரி (60) பதவியேற்றுக் கொண்டாா். அவா் கடந்த சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவராக இருந்தாா். ஹிமாசலின் முதல் துணை முதல்வா் என்ற சிறப்பையும் அவா் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT