இந்தியா

சபரிமலையில் 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜை: குவியும் பக்தர்கள் கூட்டம்!

சபரிமலை கோவிலில் வரும் 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளதை முன்னிட்டு நாளுக்குநாள் கூட்டம் அதிகரிப்பதால், பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

DIN


சபரிமலை கோவிலில் வரும் 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளதை முன்னிட்டு நாளுக்குநாள் கூட்டம் அதிகரிப்பதால், பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது முதல் பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் அதிகரித்தது.

ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 27 ஆம் தேதி மண்டல பூஜை நிறைவு பெற்றதை தொடர்ந்து அன்று இரவு நடை சாத்தப்பட்டது. தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த 30 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. 

இந்நிலையில், சபரிமலை கோவிலில் வரும் 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளதை முன்னிட்டு மகர ஜோதி தரிசனத்தை காண ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் 14 ஆம் தேதி வரையிலான ஆன்லைன் முன்பதிவு கடந்த 2 நாள்களுக்கு முன்பே முடிவடைந்துவிட்டது. இனி மகரஜோதி தரிசனம் காண விரும்புபவர்கள் உடனடி பதிவு மூலம் மட்டுமே பதிவு செய்து தரிசனம் செய்ய வாய்ப்பு உள்ளதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. 

இருப்பினும், பக்தர்கள் வருகை சபரிமலையில் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிப்பதால், காத்திருந்து தரிசனம் செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறியதாவது: மகரவிளக்கு பூஜைக்கான சுத்திகிரியைகள் வருகிற 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. பந்தளம் அரண்மனையில் இருந்து ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம் 12 ஆம் தேதி யாத்திரையாக கொண்டு செல்லப்படுகிறது.

எரிமேலி வழியாக 14 ஆம் தேதி சபரிமலை அடைந்ததும் மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடக்கிறது. 

மகரவிளக்கு பூஜை அன்று இரவு 11.30 மணி வரை நடை திறந்திருக்கும். தொடர்ந்து 19 ஆம் தேதி வரை படி பூஜை நடக்கிறது. 20 ஆம் தேதி பந்தளம் ராஜ பிரதிநிதி சபரிமலை சன்னிதானத்தில் சுவாமி தரிசனம் செய்வதை தொடர்ந்து மகர விளக்கு பூஜை நிறைவு பெறுகிறது. அதன்பிறகு கோவில் நடை சாத்தப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

ரஷியாவுக்கே இந்த நிலையா? எரிபொருள் தட்டுப்பாடு!

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்: காங்கிரஸ்

அமெரிக்கா வரி விதிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்-துரை.வைகோ

3 வெண்கலப் பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

SCROLL FOR NEXT