இந்தியா

பிரதமரின் மருத்துவ செலவுகள் குறித்து வெளிவந்த முக்கியத் தகவல்!

DIN

உலகில் அதிகம் பேசப்படும் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர். மே 2014 இல் அவர் பிரதமராக பதவியேற்றதில் இருந்து, அவரது மருத்துவ செலவுக்கு அரசு பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட செலவழிக்கவில்லை என ஆர்டிஐ(தகவல் அறியும் உரிமை)  மூலம் வெளிவந்துள்ளது.

புனேவைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் பிரஃபுல் சர்தா என்பவர் பிரதமர் அலுவலகத்துக்கு பிரதமரின் மருத்துவ செலவு குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இது குறித்து பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில் இருந்து  தகவல் தெரியவந்துள்ளது.

மருத்துவ செலவு முழுவதும் பிரதமரே ஏற்றுக் கொண்டதாகவும், அரசு பணத்திலிருந்து  மருத்துவ செலவுக்காக ஒரு ரூபாய் கூட செலவழிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) இந்தத் தகவலை அளித்துள்ளது. பிரதமர் அலுவலகச் செயலர் பினோத் பிஹாரி சிங், அளித்துள்ள பதலில், பிரதமரின் தனிப்பட்ட மருத்துவச் சிகிச்சைக்கு அரசு பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட செலவிடப்படவில்லை என்று கூறினார்.

பிரஃபுல் சர்தா கூறுகையில், பிரதமர் மோடி 135 கோடி இந்தியர்களை ஊக்குவிக்கிறார். வரி செலுத்துவோரின் பணம் பிரதமர் அலுவலகத்தின் தனிப்பட்ட பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை.

மேலும், நாடளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் தனிப்பட்ட மருத்துவச் செலவுகள் ஏதேனும் இருந்தால் அதைத் தாங்களே ஏற்றுக்கொள்ளும் பிரதமரின் வழியை பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT