நிர்மலா சீதாராமன் 
இந்தியா

நானும் ஒரு நடுத்தரக் குடும்பம்தான்.. அதனால்: நிர்மலா சீதாராமன் பேச்சு

நானும் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள்தான்.. நடுத்தரக் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து என்னால் புரிந்துகொள்ள முடியும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளா

DIN

நானும் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள்தான்.. நடுத்தரக் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து என்னால் புரிந்துகொள்ள முடியும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நிர்மலா சீதாராமன் வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றி பேசுகையில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

நானும் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள்தான், என்னை நான் அடையாளப்படுத்தும்போதும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவே அடையாளப்படுத்திக் கொள்வேன், அவர்களது சிக்கல்களை என்னால் புரிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்திருந்தார்.

மத்திய அரசு, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் குடும்பத்தினருக்கு வரும் பட்ஜெட்டில் புதிதாக எந்த வரியையும் விதிக்கப்போவதில்லை. மத்திய அரசு பொலிவுறு நகரங்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது. மக்களின் வாழ்முறையை எளிதாக்குவதிலும், மெட்ரோ ரயில் தொடர்பை மேம்படுத்துவதிலும் உத்வேகத்துடன் இருக்கிறது. இவை அனைத்தும் நடுத்தர வர்க்கத்தினருடன் தொடர்புடையவை என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் வேலை தேடிச் செல்லவும், வேலைக்குச் செல்லவும் வசதியாக நாட்டில் 27 இடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பில் மத்திய அரசு உள்ளது என்றும் அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT