அறிமுகம் செய்தது முதலே விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 
இந்தியா

கேஜரிவால் பதவி விலகக் கோரி பாஜக எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம்!

ஆம் ஆத்மி அரசின் ஊழலைக் கண்டித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதவி விலகக் கோரி பாஜக எம்எல்ஏக்கள் கருப்பு உடை மற்றும் தலைப்பாகை அணிந்து தில்லி சட்டப் பேரவைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

DIN

ஆம் ஆத்மி அரசின் ஊழலைக் கண்டித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதவி விலகக் கோரி பாஜக எம்எல்ஏக்கள் கருப்பு உடை மற்றும் தலைப்பாகை அணிந்து தில்லி சட்டப் பேரவைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சட்டப்பேரவையின் மூன்று நாள் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில் இன்று 2-வது நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

இதுகுறித்து பாஜக உறுப்பினர் அஜய் மஹவார் கூறுகையில், 

பேருந்து கொள்முதல், கலால் கொள்கை, தில்லி ஜல் வாரியத்தின் செயல்பாடுகளில் ஊழல் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். 

கேஜரிவாலின் நேர்மையற்ற அரசு, மோசமான ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மணீஷ் சிசோடியாவைக் காப்பாற்றுகிறது. அதேநேரத்தில் அமைச்சர்களில் ஒருவரான சந்யேந்தர் ஜெயின் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

நாங்கள் தில்லியின் ஊழல் அரசுக்கு எதிரானவர்கள். வகுப்பறைகள், பேருந்துகள், மதுபானக் கொள்கையில் ஊழல், ஒட்டுமொத்த இந்த அரசு ஊழல் மட்டுமே செய்கிறது எனவே முதல்வர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். 

இந்த ஊழல் அரசுக்கு எதிரான எங்கள் போராட்டத்தைக் குறிக்கும்வகையில் கருப்பு ஆடை அணிந்துள்ளோம் என்று பாஜக எம்எல்ஏ விஜேந்தர் குப்தா கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT