இருவரின் கொள்கைகளும் ஒத்துப்போகவில்லை.. புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல் 
இந்தியா

இருவரின் கொள்கைகளும் ஒத்துப்போகவில்லை.. புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல்

புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ராகுல், இருவரின் கொள்கைகளும் ஒத்துப்போகவில்லை என்று தெரிவித்துள்ளார்.

DIN


பாஜக எம்.பி. வருண் காந்தி, ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக வந்த புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ராகுல், இருவரின் கொள்கைகளும் ஒத்துப்போகவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஹோஷிப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் சில விஷயங்களை வருண் காந்தி ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால், அந்த கருத்துகளுடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை.

என்னால் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு செல்லவே முடியாது, அவ்வாறு நான் செய்வதாக இருந்தால், அதற்கு முன் நீங்கள் என் தலையை துண்டித்துவிட வேண்டும். எனது குடும்பத்துக்கு என்று ஒரு கொள்கை உள்ளது, அதற்கென ஒரு சிந்தனை முறை உள்ளது என்றும் தெரிவித்தார்.

என்னால் நிச்சயமாக அவரை சந்திக்க முடியும், அரவணைக்க முடியும். ஆனால் ஒருவோதும் அந்த சித்தாத்தங்களோடு ஒத்துப்போக முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறிவிட்டார் ராகுல்.

நடைப்பயணத்தின் போது பாதுகாப்புக் குறைபாடு நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ள ராகுல், நடைப்பயணத்தில் இணைந்த அனைவரும் பாதுகாப்பை உறுதிசெய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். கட்டிப்பிடிக்க வந்தவர், என்னைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். அவ்வளவுதான் என்று ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.

இன்று காலை ஒற்றுமை நடைப்பயணத்தின் போது ராகுல் காந்தியிடம் வந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர், திடீரென அவரை கட்டிப்பிடிக்க முயன்றதால், அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை விலக்கி வெளியேற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT