இந்தியா

ஹிமாச்சல் சிவன் கோயிலில் ராகுல் வழிபாடு!

ஹிமாச்சலில் நுழைந்த ராகுலின் நடைப்பயணத்தின்போது, கத்கரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுடார். 

ANI

ஹிமாச்சலில் நுழைந்த ராகுலின் நடைப்பயணத்தின்போது, கத்கரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுடார். 

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் பஞ்சாபில் இருந்து ஹிமாச்சலப் பிரதேசத்திற்குள் இன்று நுழைந்தது. 

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ல் தொடங்கிய பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து இன்று ஹிமாச்சலில் நுழைந்தது.

ராகுல் காந்தி, முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கத்கரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர்.

மான்சர் டோல் பிளாசாவிலிருந்து தொடங்கிய 24 கி.மீ பயணம் காங்க்ரா மாவட்டத்தின் இந்தோரா பகுதியில் உள்ள மாலூட் கிராமத்தில் ஒன்றிணைந்து, ஜனவரி 19 அன்று ஜம்மு - காஷ்மீரில் நுழையத் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - பாக். உறவை இணைப்போம்: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் டிரம்ப்!

டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்த மார்க்ரம்!

கரூர் கூட்ட நெரிசல் பலி!: CBI விசாரணைக்கு உத்தரவு | செய்திகள்: சில வரிகளில் | 13.10.25

ரிக்கல்டான், டோனி டி ஸார்ஸி அரைசதம்; தென்னாப்பிரிக்கா நிதான ஆட்டம்!

இரவில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT