பிரதமர் மோடியை வரவேற்கத் தயாராகிவரும் கர்நாடகம்!
ஒரு வார இடைவெளியில் இரண்டாவது முறையாக கர்நாடகத்திற்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
ஒரு வார இடைவெளியில் இரண்டாவது முறையாக கர்நாடகத்திற்கு வரும்
பிரதமர் மோடியை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
கர்நாடகத்தில் யாத்கிரி மற்றும் கல்புர்கி மாவட்டங்களுக்குச் செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
ஹைதராபாத்-கர்நாடகா என்று அழைக்கப்படும் கல்யாண் கர்நாடகா பகுதியில் உள்ள 41 சட்டமன்றத் தொகுதிகளில் ஆளும் பாஜக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறது.
மேலும் ரூ.10,800 கோடி மதிப்பிலான திட்டங்களைத் துவக்கி வைக்கிறார். இது தவிர, யாத்கிர் மாவட்டத்தில் உள்ள கொடேகலில் நடைபெறும் மாபெரும் மாநாட்டிலும் அவர் உரையாற்றுகிறார்.
யாத்கிர் மாவட்டத்திற்கு பிரதமர் மோடியின் முதல் பயணம் இதுவாகும்.