முகப்பு
இந்தியா

மகரவிளக்கு பூஜை நிறைவு: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை காலம் முடிவடைந்ததையடுத்து இன்று கோயில் நடை சாத்தப்பட்டது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:45 PM
சபரிமலை
பகிர்:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை காலம் முடிவடைந்ததையடுத்து இன்று கோயில் நடை சாத்தப்பட்டது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. தினசரி லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனத்துக்காக சபரிமலை வந்தனர்.

மகரஜோதி தரிசனத்துக்காக சபரிமலை வருகை தந்திருந்த பக்தா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை தேவஸ்வம் வாரியமும் மாநில அரசும் மேற்கொண்டிருந்தன.

இரண்டு மாத கால மண்டல-மகரவிளக்கு பூஜைக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தயடுத்து இன்று (ஜன. 20) கோயில் நடை சாத்தப்பட்டது. 

தொடர்ந்து மாசி மாத பூஜைக்காக வருகிற பிப்ரவரி 12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் திறக்கப்படுகிறது. பிப். 12 முதல் 17 ஆம் தேதி வரை சிறப்புப் பூஜைகள் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவிலான பக்தா்களே அனுமதிக்கப்பட்ட இந்தாண்டு திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.