இந்தியா

இரட்டைப் பெண் குழந்தைகள் பெற்ற மனைவி: ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கணவர்!

DIN

மனைவிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சோக சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் பாலாகாட் பகுதியில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று முன் தினம் (ஜனவரி 18) நடந்துள்ளது. 

இது குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: தற்கொலை செய்து கொண்டவர் வாசுதேவ் பட்லே என்ற வணிகர் ஆவார். வசதியான பின்புலம் கொண்ட அவருக்கு சொந்தமாக 20 ஏக்கர் நிலங்கள் உள்ளன. புதன்கிழமை மாலை அவர் வெயின்கங்கா நதியின் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடல் வியாழக்கிழமை (ஜனவரி 19) காலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது மனைவிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

அவரது மனைவிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்த விஷயம் தெரிந்த சிறிது நேரத்தில் வாசுதேவ் வெளியே புறப்பட்டுள்ளார். எங்கு செல்கிறீர்கள் என உறவினர்கள் கேட்டதற்கு மருந்து வாங்க செல்கிறேன் என கூறிச் சென்ற அவர் இந்த சோகமான முடிவை எடுத்துள்ளார். பட்லேவின் உடன் பிறந்தவர்கள் 4 பேர். அதில் அவர் மட்டுமே ஆண் குழந்தை. புதிதாக பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகள் உட்பட அவருக்கு 4 பெண் குழந்தைகள். அவர்களில் மூத்த குழந்தைகளுக்கு ஒருவருக்கு 6 வயது, மற்றொருவருக்கு 4 வயது ஆகும் என்றனர்.

இந்த சம்பவம் அவரது உறவினர்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT