ராகுலுடன் இணைந்த சிவசேனை எம்பி சஞ்சய் ரெளத் 
இந்தியா

ஒற்றுமை நடைபயணம்: ராகுலுடன் இணைந்த சிவசேனை எம்பி

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் சிவசேனை கட்சியின் எம்பி சஞ்சய் ரெளத் இணைந்துள்ளார். 

DIN

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் சிவசேனை கட்சியின் எம்பி சஞ்சய் ரெளத் இணைந்துள்ளார். 

நாட்டில் ஒற்றுமையை வலியுறுத்தியும், மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரான ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நடைபயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, ஹரியாணா, ஹிமாச்சல், தில்லி உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து தற்போது ஜம்மு காஷ்மீரை அடைந்துள்ளது. 

இந்த நடைபயணத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் இன்று நடைபெற்ற நடைபயணத்தில் சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரெளத் கலந்து கொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT