இந்தியா

கே. அண்ணாமலைக்கு இன்று முதல் 'Z' பிரிவு பாதுகாப்பு

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலைக்கு இன்று முதல் 'Z' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

DIN

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலைக்கு இன்று முதல் 'Z' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலையின் பாதுகாப்பை, ‘எக்ஸ்’ பிரிவில் இருந்து ‘இஸட்’ பிரிவுக்கு மத்திய அரசு மேம்படுத்தியுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன. ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பின் கீழ், அவருக்கு 24 மணிநேரமும் சுழற்சி அடிப்படையில் மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) 30 கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிப்பாா்கள்; இந்தியா முழுவதும் அவா் எங்கு சென்றாலும் பாதுகாப்பு வாகனமும் உடன் செல்லும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அண்ணாமலைக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து மத்திய உளவு அமைப்புகள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் அவருக்கான பாதுகாப்பு ‘எக்ஸ்’ பிரிவில் இருந்து ‘இஸட்’ பிரிவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மிக முக்கிய பிரமுகா்களுக்கான பாதுகாப்புப் பணியின் கீழ், மத்திய ரிசா்வ் போலீஸ் படை சுமாா் 100 பேருக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது. 

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோா் இந்தப் பாதுகாப்பில் உள்ளனா். இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலைக்கு இன்று முதல் 'Z' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு

நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழா! ராம்நாத் கோவிந்த பங்கேற்பு!

காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை!

ரிஷபத்துக்கு வெற்றி: தினப்பலன்கள்!

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

SCROLL FOR NEXT