இந்தியா

அரசுப் பள்ளி சத்துணவில் தினை வகைகள்!

DIN

புணேவில் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில் தினை வகையை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்யும் வகையில், புத்தாக்க தொழில் நிறுவனம் தானியங்களை வழங்க முன்வந்துள்ளது. 

மகாராஷ்டிரத்தில் அக்ரோஜீ ஆர்கானிக் என்ற புத்தாக்க நிறுவனம், சிறு-குறு விவசாயிகள் மற்றும் பெண்களிடமிருந்து தினை வகைகளைப் பெற்று விற்பனை செய்து வருகிறது. 

இந்நிலையில், இந்த நிறுவனம் புணேவிலுள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை கருத்தில் கொண்டு சத்துணவில் தினை வகைகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. 

அதற்காக, முதல்கட்டமாக புணேவின் புரந்தரா தாலுகாவிலுள்ள 7 அரசுப் பள்ளிகளில் தினைப் பொருள்களை அந்நிறுவனம் வழங்கவுள்ளது.  இந்த தாலுகாவிலுள்ள அரசுப் பள்ளி ஒவ்வொன்றிலும் 300 மாணவர்கள் பயில்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT