ராகுல் காந்தி 
இந்தியா

''நான் ஏன் கம்பளி ஆடை அணிவதில்லை''... காந்தியைப் போல கதை பகிரும் ராகுல்!

ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு விழாவில் பேசிய ராகுல் காந்தி, தான் ஏன் கம்பளி ஆடை (ஸ்வெட்டர்) அணிவதில்லை என்பதற்கான காரணத்தை கதையாக விளக்கியது பலரைக் கவர்ந்தது. 

DIN


ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு விழாவில் பேசிய ராகுல் காந்தி, தான் ஏன் கம்பளி ஆடை (ஸ்வெட்டர்) அணிவதில்லை என்பதற்கான காரணத்தை கதையாக விளக்கியது பலரைக் கவர்ந்தது. 

ஒற்றுமை நடைப்பயணத்தின்போது அவர், தான் சந்தித்த நான்கு குழந்தைகள் குறித்த கதையைக் கூறினார். 

ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு விழா ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று நடைபெற்றது. அதில் கொட்டும் பனிமழையில் பேசிய ராகுல் காந்தி, தான் ஏன் கம்பளி ஆடை அணிவதில்லை என்பது குறித்து விளக்கினார். 

அப்போது பேசிய அவர், ஒற்றுமை நடைப்பயணத்தின்போது, நான் நான்கு குழந்தைகளைச் சந்தித்தேன். அவர்கள் ஆடையின்றி வெறும் உடலில் இருந்தனர். பிச்சை எடுத்துக்கொண்டிருப்பதாகக் கூறிய அவர்கள், மாலை நேரக் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தனர். நான் அவர்களை கட்டியணைத்தேன். குழந்தைகள் பசியில் இருப்பதை அறிந்துகொண்டேன். யாத்திரையின்போது வெகுவாக பாதித்த அந்த நிகழ்வுக்குப் பிறகு நானும் அதேபோன்று இருக்க முடிவெடுத்தேன் என்றார். 

ஒற்றுமைப் பயணத்தின்போது நிறைய கற்றுக்கொண்டேன். ஒரு நாள் நான் கால் வலியால் துடித்துக்கொண்டிருந்தேன். நான் ஒரு நாளில் 6 முதல் 7 மணி நேரம் நடப்பதால் வந்த விளைவு அது என்பது தெரியும். ஒரு சிறுமி ஓடி வந்து, உங்களுக்காக ஒன்று எழுதியிருக்கேன் என்று என்னிடம் ஒரு கடிதம் நீட்டினாள். என்னை கட்டியணைத்துவிட்டு ஓடிவிட்டாள். நான் அந்த கடிதத்தைப் பிரித்து படிக்க ஆரமித்தேன். 

அவள் எழுதியிருந்தாள், உங்கள் கால்களில் நீங்கள் பளு கொடுப்பதால், உங்கள் முழங்கால் வலிப்பதை நான் பார்த்தேன். உங்கள் முகம் அதை காட்டிக்கொடுக்கிறது. உங்களுடன் சரிசமமாக என்னால் நடக்க முடியாது. ஆனால் இதயத்திலிருந்து நான் உங்களுடன் நடக்கிறேன். ஏனென்றால் நீங்கள் எனக்காவும், எனது எதிர்காலத்திற்காகவும் நடக்கிறீர்கள் என்பது தெரியும் என்று எழுதியிருந்தாள். அதைப் படிக்கும் நொடியில் என் வலிகள் பெரிதாகத் தெரியவில்லை என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT