கேரள பயணத்தை தவிர்க்கவும்: 2 நாள்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
கேரளத்தில் இரண்டு நாள்களுக்கு அதிகனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளத்தில் இரண்டு நாள்களுக்கு அதிகனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளத்தில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்யும் என்பதால், சில மாவட்டங்களுக்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் மாவட்டத்துக்கு இன்றும், கண்ணூர் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு நாளையும் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இதுவரை ரூ. 2.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ. 2,000 நோட்டுகள் வாபஸ்!
இதனால், கேரள மாநிலத்துக்கு எல்லையோர மாநிலங்களிலிருந்து தேவையற்ற பயணத்தை தவிர்ப்பது நல்லது.