கிஷன் ரெட்டி 
இந்தியா

மத்திய அமைச்சரவையில் மாற்றம்? தெலங்கானா பாஜக தலைவரானார் கிஷன் ரெட்டி

தெலங்கானா, பஞ்சாப், ஜார்க்கண்ட், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்கு பாஜக புதிய தலைவர்களை நியமனம் செய்துள்ளது.

 நமது நிருபர்

தெலங்கானா, பஞ்சாப், ஜார்க்கண்ட், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்கு பாஜக புதிய தலைவர்களை நியமனம் செய்துள்ளது.
இது தொடர்பாக பாஜகவின் தேசியப் பொதுச் செயலாளர் அருண் சிங் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் "பாஜகவின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறையின் அமைச்சராக உள்ள ஜி.கிஷண் ரெட்டியை தெலங்கானா மாநில பாஜக தலைவராக நியமித்துள்ளார். இந்த நியமன அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் பஞ்சாப் மாநிலத் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் குமார் ஜாக்கர் (69) நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
ஜார்க்கண்ட் மாநில பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்வருமான பாபுலால் மராண்டி (65) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர பிரதேசத்தின் புதிய மாநிலத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் டி.புரந்தேஸ்வரி (64) நியமிக்கப்பட்டுள்ளார். 
ஆந்திரத்தின் முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டியை (62), தேசிய பாஜக  செயற்குழு உறுப்பினராக ஜெ.பி. நட்டா நியமித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT