பாஜகவின் சதித்திட்டத்தை எதிர்த்துப் போராடுவோம்: கார்கே
பாஜகவின் சதித்திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
பாஜகவின் சதித்திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
கிரிமினல் அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனைக்குத் தடை கோரி காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தொடுத்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து குஜராத் உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், ராகுல் எப்போதுமே சத்தியத்திற்காகப் போராடினார் என்றும், எதிர்காலத்தில் தொடர்ந்து போராடுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக அரசின் சதித்திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் எனவும் கார்கே தனது சுட்டுரை(டிவிட்டர்) பக்கத்தில் இந்தியில் பதிவிட்டுள்ளார்.