இந்தியா

ம.பி.: 8-ஆவது சிவிங்கிப் புலி உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கிப் புலி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

மத்திய பிரதேச மாநிலம், குனோ தேசிய பூங்காவில் ஆண் சிவிங்கிப் புலி (சீட்டா) ஒன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து இந்தப் பூங்காவில் இறந்த 8-ஆவது சிவிங்கிப் புலி இதுவாகும்.

இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப்புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் லட்சியத் திட்டத்தின்கீழ், நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகளும் (5 பெண், 3 ஆண்), தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகளும் (7 ஆண், 5 பெண்) கொண்டுவரப்பட்டு, குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்டன.

இதில், ‘சாஷா’ எனும் பெண் சிவிங்கிப் புலி சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த மாா்ச் மாதம் உயிரிழந்தது. பின்னா், ‘உதய்’ எனும் ஆண் சிவிங்கிப் புலி கடந்த ஏப்ரல் மாதமும், ‘தக்ஷா’ என்ற பெண் சிவிங்கிப் புலி கடந்த மே மாதமும் இறந்தன.

இதனிடையே, ஜ்வாலா என்ற பெண் சிவிங்கிப் புலி, குனோ பூங்காவில் ஈன்றிருந்த 4 குட்டிகளில், 3 குட்டிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.

கடந்த செவ்வாய்க்கிழமை, தேஜஸ் என்ற 4 வயது ஆண் சிவிங்கிப் புலி, தனது வாழ்விடத்தில் இறந்தது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட சுராஜ் என்ற ஆண் சிவிங்கிப் புலி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வேலியிடப்பட்ட வாழ்விடத்தில் இருந்து, வனத்துக்குள் விடப்பட்டிருந்த இந்த சிவிங்கிப் புலியின் உடலில் காயங்கள் காணப்படுகின்றன. அதன் இறப்புக்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட முருகன் பட்டு கூட்டுறவு விற்பனை நிலையம்

இந்த நாள் இனிய நாள்!

காஞ்சிபுரத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT