இந்தியா

நிலவு குறித்து இந்தியா கண்டறிந்ததை மற்ற நாடுகள் கண்டறியவில்லை : ஜிதேந்திர சிங்

DIN

 நிலவு குறித்து சந்திராயன் திட்டங்கள் மூலம் இந்தியா கண்டறிந்த தகவல்களை நிலவு குறித்து ஆய்வு மேற்கொள்ளும் உலக நாடுகள் நாடுகள் கண்டறியவில்லை என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

இஸ்ரோவின் சந்திராயன் திட்டங்கள் மூலம் இந்தியா விண்வெளித் துறையில் உலக அளவில் முன்னணி நாடாகத் திகழ்கிறது எனவும் அவர் தெரிவித்தார். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் சந்திராயன் - 3 திட்டத்துக்கான ராக்கெட் நேற்று (ஜூலை 14) ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதையடுத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது: மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா தனது விண்வெளி ஆராய்ச்சிப் பயணத்தை தாமதமாக தொடங்கிய போதிலும், சந்திரயான் திட்டங்கள் மூலம் நிலவு குறித்து இந்தியா கண்டறிந்த தகவல்களை நமக்கு முன்னால் விண்வெளி ஆராய்ச்சிப் பயணத்தை தொடங்கிய நாடுகள் கண்டுபிடிக்கவில்லை. சந்திராயன் திட்டத்தின் ஆராய்ச்சிகளை சந்திரான் - 3 மேலும் விரிவுபடுத்தப் போகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் நிலவின் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த சந்திராயன் - 3 திட்டம் பல்வேறு விதமான பலன்களை இந்தியாவுக்கு அளிக்கப் போகிறது. சந்திராயன் - 3 திட்டம் இந்தியாவை விண்வெளித் துறையில் உலக அளவில் முன்னணி நாடாக மாற்றியுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிப்பறி வழக்கு: எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

புழல் சிறையில் கைதிகள் தகராறு: 8 போ் மீது வழக்கு

ரயில்வே கோச் உணவகத்தில் ரூ.2.42 லட்சம் திருட்டு

அனுமதியில்லா விளம்பரப் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி ஆணையா் உத்தரவு

சாலை விபத்து: மின்வாரிய அதிகாரி உயிரிழப்பு

SCROLL FOR NEXT