இந்தியா

பாஜகவை வீழ்த்துவதே இலக்கு! எதிர்க்கட்சிகள் கூட்டம் தொடக்கம்!!

பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று மாலை 7 மணியளவில் தொடங்கியது. 

DIN

பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று மாலை 7 மணியளவில் தொடங்கியது. 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய பாஜகவுக்கு எதிராக இரண்டாவது முறையாக எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. 

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க 24 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழக முதல்வர், முதல்வர் மு.க. ஸ்டாலின், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், ஹேமந்த் சோரன், பகவந்த் மான், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு 16 கட்சிகள் அழைக்கப்பட்டிருந்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT