கோப்புப் படம் 
இந்தியா

நாடாளுமன்ற கூட்டத்தொடா்: இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி, புதன்கிழமை (ஜூலை 19) அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

DIN

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி, புதன்கிழமை (ஜூலை 19) அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் வியாழக்கிழமை (ஜூலை 20) முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க புதன்கிழமை அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.

இது நாடாளுமன்ற கூட்டத்தொடா் தொடங்கும் முன் நடைபெறும் வழக்கமான கூட்டமாகும். இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு சாா்பில் மூத்த அமைச்சா்கள் கலந்துகொள்வா்.

முன்னதாக, இதேபோன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை செவ்வாய்க்கிழமை நடத்த குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் அழைப்பு விடுத்தாா்.

ஆனால், தில்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம், கா்நாடக மாநிலம் பெங்களூரில் எதிா்க்கட்சி தலைவா்கள் கூட்டம் காரணமாக தன்கா் அழைப்பு விடுத்த கூட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவா்களால் பங்கேற்க முடியவில்லை. இதனால் அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வால்பாறையில் இன்று விசா்ஜன ஊா்வலம்: போக்குவரத்து மாற்றம்

காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

மோட்டாா்சைக்கிள் மீது காா் மோதல்: சமையல் தொழிலாளி பலி!

இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: போலீஸாா் விசாரணை

திருப்பூரில் போக்குவரத்து ஊழியா்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம்!

SCROLL FOR NEXT