இந்தியா

தில்லியைத் தொடர்ந்து தத்தளிக்கும் மும்பை: ஆரஞ்சு எச்சரிக்கை

இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் மும்பையில் பெய்த கன முதல் மிகக் கனமழை காரணமாக, நகரமே தத்தளிக்கிறது.

DIN

இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் மும்பையில் பெய்த கன முதல் மிகக் கனமழை காரணமாக, நகரமே தத்தளிக்கிறது.

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் சராசரி அளவு 88.24 மில்லி மீட்டர் என்று பதிவாகியிருக்கிறது.

ஏற்கனவே, மும்பை தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையமோ, செவ்வாய்க்கிழமை, மும்பையில் கன முதல் மிகக் கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பை மற்றும் தானே மாவட்டங்களில் அடுத்த ஒரு சில மணி நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மும்பையின் பாந்த்ரா, செம்பர், கோட்டை, மாதுங்கா, பைகுள்ளா பகுதிகளில் திங்கள்கிழமை இரவு கனமழை பெய்துள்ளது.

இந்த நிலையில்தான், ஜூலை 19ஆம் தேதி வரை மும்பைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு திருட்டு: காங்கிரஸ் கையொப்ப இயக்கம் தொடக்கம்

கல்லூரியில் மருத்துவ முகாம்

மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

பசுமை ஹைட்ரஜன் மூலம் மின் உற்பத்தி: என்எல்சி தலைவா் தகவல்

சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT