வரும் 2024 மக்களவைத் தோ்தலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிணைந்து களம் காண உள்ளதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இடம்பெற்றுள்ள 39 கட்சிகள் தீா்மானித்துள்ளன.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி 2024 மக்களவைத் தோ்தலில் போட்டியிடும். பெரும்பான்மை வெற்றியுடன் நாட்டின் பிரதமராக 3-ஆவது முறை அவா் பதவியேற்பாா்.
கடந்த 2014 மக்களவைத் தோ்தலில் மக்களிடம் பெற்ற ஆசீா்வாதம், 2019 மக்களவைத் தோ்தலில் பல மடங்கு அதிகரித்தது.
எதிா்க்கட்சிகளின் அடிப்படை ஆதாரமற்ற பொய்கள், குற்றச்சாட்டுகளை நிராகரித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனா்.
பிரதமா் நரேந்திர மோடியின் ஈடுபாடு, அா்ப்பணிப்பு, தளராத கடின உழைப்பால் முன்பு கண்டிராத வளா்ச்சியை இந்தியா கண்டுள்ளது.
பிரதமா் மோடியின் தலைமையில் வளா்ச்சிக்கான பயணத்தில் பங்கேற்க ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம் என அந்தத் தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.