கோப்புப்படம் 
இந்தியா

ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எரித்துக் கொலை!

ராஜஸ்தானின் ஜோத்பூரில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

ராஜஸ்தானின் ஜோத்பூரில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜோத்பூரின் ஒரு வீட்டில் கருகிய நிலையில் நான்கு பேரின் உடல்களை போலீஸார் கண்டெடுத்தனர். இதையடுத்து போலீஸார் அப்பகுதிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முதற்கட்டமாக நான்கு பேரும் கொலை செய்யப்பட்டு, பின்னர் அவர்களின் உடலுக்கு தீ வைத்து எரித்துள்ளதாக காவல் கண்காணிப்பாளர் தர்மேந்திர சிங் தெரிவித்தார். 

இது பழிவாங்கும் நோக்கத்தில் செய்யப்பட்டதாக தெரிகிறது. ஒசியா பகுதியில் உள்ள செராய் கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். 

சம்பவ இடத்தில் ஜோத்பூர் ஆணையர் ஹிமான்ஷு குப்தா, எஸ்.பி.சிங் மற்றும் பிற அதிகாரிகள் கூடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT