இந்தியா

மணிப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்த மியான்மர் நாட்டினர்!

மியான்மர் நாட்டைச் சேர்ந்த 718 பேர் சட்டவிரோதமாக மணிப்பூருக்குள் நுழைந்துள்ளதாக மணிப்பூர் மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

DIN

மியான்மர் நாட்டைச் சேர்ந்த 718 பேர் சட்டவிரோதமாக மணிப்பூருக்குள் நுழைந்துள்ளதாக மணிப்பூர் மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

மணிப்பூரில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது. இந்நிலையில் 301 குழந்தைகள், 208 பெண்கள் உள்பட 718 மியான்மர் நாட்டினர் ஜூலை 22, 23 ஆகிய தேதிகளில் 6 பிரிவுகளாக சரியான ஆவணம் இல்லாமல் மணிப்பூரில் சந்தேல் மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளனர். 

இதுகுறித்து மணிப்பூர் மாநில அரசு, அவர்கள் எவ்வாறு மணிப்பூருக்குள் நுழைந்தார்கள்? அனுமதி அளித்தது எப்படி? என்று அசாம் ரைபிள்ஸ் படையிடம் விளக்கம் கோரியுள்ளது. 

மேலும் இதுகுறித்து துணை ராணுவப் படையும் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறியுள்ள மாநில அரசு, சட்டவிரோதமாக உள்நுழைந்தவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க சந்தேல் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT