இந்தியா

மணிப்பூர் விவகாரம்: இரு அவைகளும் ஒத்திவைப்பு!

மணிப்பூர் விவகாரம் குறித்து  எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

DIN

மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை இரு அவைகளிலும் நடவடிக்கைகள் தொடங்கின. இதில், மக்களவையில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.

இந்நிலையில், அவையில் இன்றைய நிகழ்வுகள் தொடங்கி 3 நிமிடங்களில் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கமிட்ட நிலையில் மாநிலங்களவை பகல் 12 மணி வரை அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஒத்திவைத்தார். 

தொடர்ந்து நான்காவது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

SCROLL FOR NEXT