முகப்பு
இந்தியா

மக்களவை முடக்கம்: அனைத்துக் கட்சிகளுடன் ஓம் பிர்லா ஆலோசனை!

அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:42 AM
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா(கோப்புப்படம்)
பகிர்:

அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தொடர்ந்து நான்காவது நாளாக இரு அவைகளும் முடங்கியுள்ளன. 

இன்றும் காலை முதலே மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. 

இந்நிலையில், மக்களவையில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடன் அவைத் தலைவர் ஓம் பிர்லா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து அவர் எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை வைக்கவுள்ளதாகத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.