உ.பி.யில் பல்வேறு மாவட்டங்களில் போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு தேவையான சில அறிவுரைகளை அவர் வழங்கினார். அதில், மழை குறைவாக பெய்தாலும், அதிகமாக பெய்தாலும் விவசாயிகள் கவலைப்பட வேண்டாம், ஒவ்வொரு கட்டத்திலும் அரசு துணை நிற்கிறது.
மக்களுக்கு உணவு வழங்கும் விவசாயிகளின் நலன்களே அரசின் முன்னுரிமை.
எனவே, குறைவான மழையினால் ஏற்படும் பாதிப்புகளை கணக்கெடுப்பு மூலம் துல்லியமாக மதிப்பிட வேண்டும். நீர்த்தேக்கங்களில் குவிந்துள்ள வண்டல் மண்ணை அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட அவர், மழை குறைந்தால் மாற்று பயிர்களை விதைக்க விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
மேலும் போதிய மழைப்பொழிவு குறித்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்புமாறும் அதிகாரிகளுக்கு ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.