முகப்பு
இந்தியா

தில்லியில் அதிகரிக்கும் டெங்கு: மாநகராட்சி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

தலைநகர் தில்லியில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துவரும் நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:45 AM
கோப்புப் படம்
பகிர்:

தலைநகர் தில்லியில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துவரும் நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். 

தில்லியில் கடந்த ஒரு வாரத்தில் 56 பேருக்கு புதிதாக டெங்கு பதிவாகியுள்ளன. ஜூலை 22 வரை 187 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜூலை 28 வரை டெங்கு பாதிப்பு 243 ஆக உயர்ந்துள்ளது. 

தில்லி மாநகராட்சியில் சுமார் 3000 டெங்கு இனப்பெருக்கம் சரிபார்க்கும் பணியாளர்களும், 2000 களப் பணியாளர்களும் உள்ளனர். 

இந்நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனவரி 1 முதல் ஜூலை 28 வரையிலான காலகட்டத்தில் 72 மலேரியா வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →