இந்தியா

இந்தக் கருவி இருந்திருந்தால் ஒடிசா ரயில் விபத்தை தவிர்த்து இருக்கலாம்!

கவாச் எனும் ரயில் பாதுகாப்புக் கருவி  கோரமண்டல் ரயிலில் இருந்திருந்தால் ஒடிசா ரயில் விபத்தை தவிர்த்து இருக்கலாம் என்று ரயில்வேத் துறை உறுதிப்படுத்தி உள்ளது.

DIN

கவாச் எனும் ரயில் பாதுகாப்புக் கருவி  கோரமண்டல் ரயிலில் இருந்திருந்தால் ஒடிசா ரயில் விபத்தை தவிர்த்து இருக்கலாம் என்று ரயில்வே துறை உறுதிப்படுத்தி உள்ளது.

ரயில்வே துறை செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா கூறுகையில், ஒடிசாவில் விபத்து நடந்த வழித்தடத்தில் கவாச் கருவி பொருத்தப்படவில்லை என்று உறுதிப்பட தெரிவித்தார்.

ரயில் மோதல்களை தவிர்ப்பதற்காக கவாச் எனும் அதிநவீன மின்னணு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட வேகம், சிக்னலை மீறி ரயில் சென்றால் கவச் கருவி மூலம் எச்சரிக்கை கொடுக்கப்படும்.

இந்த தொழில் நுட்பத்தில் தாமாகவே பிரேக் போட்டு ரயில் நிறுத்தப்படும். இதுதான் கவாச் கருவியின் சிறப்பு அம்சமாகும். கடந்த 2022 மத்திய பட்ஜெட்டில் கவாச் எனும் ரயில் பாதுகாப்புக் கருவி உருவாக்கப்படும் மத்திய அரசு அறிவித்து இருந்தது.

கவாச் கருவி குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கமளிக்கும் விடியோக்கள் சமூக ஊடங்களில் வைரலாகி வரும் நிலையில், திரிணாமுல் கட்சியின் சாகேத் கோகலே, ரயில் வழித்தடங்களில் 2% மட்டுமே கவாச் கருவி பொருத்தப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. 

பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 280 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும், ரயில் விபத்து நாடு முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

SCROLL FOR NEXT