ஒடிசாவில் சரக்கு ரயில் பெட்டிகள் சரிந்து 6 பேர் பலி!
ஒடிசாவின் ஜஜ்பூர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் பெட்டிகள் சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
ஒடிசாவின் ஜஜ்பூர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் பெட்டிகள் சரிந்ததில் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மழை பெய்ததால் ஒப்பந்த தொழிலாளர்கள் சரக்கு ரயிலின் கீழ் ஒதுங்கியிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மழை பெய்ததால் ஒப்பந்த தொழிலாளர்கள் சரக்கு ரயிலின் கீழ் ஒதுக்கியுள்ளனர்.
Advertisement
Advertisement
ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மழை பெய்ததால், சரக்கு ரயில் பெட்டிகள் இருந்த இடத்தில் ஒதுங்கியுள்ளனர். அப்போது சரக்குப்பெட்டிகள் சரிந்து ஊழியர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
முதலில் நான்கு பேர் மட்டுமே உயிரிழந்த நிலையில், அதிக காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரில் இருவர் உயிரிழந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.