FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஏர் இந்தியா விமானம் ரஷியாவில் அவசரமாக தரையிறக்கம்: நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் அமெரிக்கா!

தில்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியா விமானம் ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அடுத்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா

2 பிப்ரவரி 2024, 12:34 am IST
ஏர் இந்தியா விமானம்
பகிர்:


வாஷிங்டன்: தில்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியா விமானம் ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அடுத்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

தில்லியில் இருந்து 216 பயணிகள், 16 விமான பணியாளர்களுடன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு செவ்வாய்க்கிழமை ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானம் வானில் பறந்துகொண்டிருந்துபோது என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டறிந்த விமானி, விமானத்தை ரஷியாவில் உள்ள மகதான் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக டாடா குழுமத்துக்குச் சொந்தமான தனியார் கேரியர் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மகாதன் விமான நிலையத்தில்  அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கிடைத்ததையடுத்து, 216 பயணிகள் மற்றும் 16 பணியாளர்களுடன் விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், அமெரிக்கா நோக்கி வந்த விமான ரஷியாவின்  மகாதன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் செய்தித் தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

அமெரிக்கா வந்த விமானம் ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அறிவோம். நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். அந்த விமானத்தில் எத்தனை அமெரிக்க குடிமக்கள் இருந்தனர் என்பதை இப்போது உறுதிப்படுத்த முடியவில்லை. 

பயணிகள் தங்கள் பாதையில் செல்வதற்கு வேண்டிய ஒரு மாற்று விமானத்தை அனுப்ப உள்ளனர். இது குறித்த மேலும் எதுவும் பேச நான் விரும்பவில்லை என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments