இந்தியா

எனக்கும், எனது சகோதரருக்கும் தொலைபேசியில் கொலை மிரட்டல்: சஞ்சய் ரௌத்

சிவசேனை மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரௌத் மற்றும் அவரது சகோதரருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலில் இரண்டு பேரை மகாராஷ்டிர காவல் துறை தடுப்புக் காவலில் வைத்துள்ளது.

DIN

சிவசேனை மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரௌத் மற்றும் அவரது சகோதரருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலில் இரண்டு பேரை மகாராஷ்டிர காவல் துறை தடுப்புக் காவலில் வைத்துள்ளது.

சிவசேனை  மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரௌத் மற்றும் அவரது சகோதரரும் சட்டமன்ற உறுப்பினருமான சுனில் ரௌத் இருவருக்கும் மர்ம நபர்களால் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சுனில் ரௌத் தெரிவித்தார்.  கொலை மிரட்டல் விடுத்த நபர் அவரையும், அவரது சகோதரரான சஞ்சய் ரௌத்தையும் சுட்டுக் கொன்றுவிடுவேன் என மிரட்டியதாகவும் அவர் தெரிவித்தார். 

இது குறித்து சஞ்சய் ரௌத் கூறியதாவது: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு சமூக ஊடகம் வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது மிகவும் கவனம் கொடுக்கப்பட வேண்டிய விஷயம். இதுபோன்ற மிரட்டல்கள் எதிர்க்கட்சியினை அச்சுறுத்துவதற்காக விடுக்கப்படுகிறது. இந்த மிரட்டல்களுக்கு அரசு அதிக கவனம் கொடுக்க வேண்டும். நான் அல்ல. அரசுக்கு இதுபோன்ற அச்சுறுத்தல்கள் தேவைப்படுகின்றன. இந்த விஷயம் தற்போது காவல் துறை வசம் உள்ளது. அவர்கள் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். எனது சகோதரர் சுனில் ரௌத்துக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. நான் எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை. நாங்கள் இந்த மிரட்டல் குறித்து கவலைப்படவில்லை. இதுபோன்ற மிரட்டல் கடந்த காலங்களிலும் வந்திருக்கிறது என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை தரப்பில் கூறியதாவது: சந்தேகத்தின் இரண்டு பேரை தடுப்புக் காவலில் வைத்துள்ளோம். இந்த மிரட்டல் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்காக காத்திருக்கிறோம். புகார் அளித்தவுடன் அவர்கள் இருவரையும் கைது செய்வோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லையில் பதற்றம்! பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - சண்டை நிறுத்தம் மீறல்!

உயிர்த்தெழும் ஓவியமே... ப்ரீத்தி சர்மா!

வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!

அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: பிடியை இறுக்கும் அமலாக்கத் துறை!

கோபி, சுதாகரின் ஓ காட் பியூட்டிஃபுல் புரோமோ விடியோ!

SCROLL FOR NEXT