இந்தியா

கரோனாவில் பலியான 2 மருத்துவர்களுக்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி: கேஜரிவால்

DIN

தலைநகர் தில்லியில் கரோனாவுக்கு பலியான 2 மருத்துவர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவிக்கான காசோலையை ஆம் அத்மி அரசு வழங்கியுள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வந்த கரோனா தொற்று பல லட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிர்களை பறித்தது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து பலரும் வேதனையடைந்தனர். 

இந்நிலையில், தில்லியில் சுகாதாரப் பணியில் ஈடுபட்டு பல உயிர்களை காப்பாற்றிய இரண்டு மருத்துவர்கள் கரோனாவுக்கு உயிரிழந்தனர். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆம் ஆத்மி அரசு தலா ஒரு கோடி நிதியுதவி அளிக்கப்படும் என அறிவித்திருந்தது. 

அதன்படி, கரோனாவில் பலியான மருத்துவர்களான ரமேஷ் குமார் மற்றும் மருத்துவர் சஞ்சய் குமார் ஆகியோரின் குடும்பத்தினரைச் சந்தித்து தில்லி அமைச்சரவை அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் தலா ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். 

மேலும், பலியான மருத்துவர்களின் குடும்பங்களை ஆம் ஆத்மி கவனித்துக்கொள்வதாக உறுதி அளித்ததாக கேஜரிவால் டிவிட்டர் மூலம் பதிவிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் சமூக நீதி

அரசுப் பள்ளிகளின் சாதனை!

யோகமான நாள் இன்று!

இன்றைய ராசி பலன்கள்!

இளைஞரை கொல்ல முயற்சி: 6 போ் கைது

SCROLL FOR NEXT