பிபர்ஜாய் புயல் தொடர்பாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் எம்.பி.க்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அரபிக் கடலில் அதிதீவிர புயலாக உருமாறியுள்ள ‘பிபா்ஜாய்’ புயல், குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 15) பிற்பகல் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று காலை பல்வேறு மாநில, யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக இன்று பிற்பகல் பிபர்ஜாய் புயலை எதிர்கொள்வது குறித்த ஆய்வு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்று வருகிறது.
த்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள 8 மாவட்டங்களின் எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.