முகப்பு
இந்தியா

நாட்டில் கரோனா சிகிச்சையில் 2,148 பேர்!

இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,148 ஆகப் பதிவாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:07 PM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,148 ஆகப் பதிவாகியுள்ளது. 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 120 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை (4,49,93,080) ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இதையடுத்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை  5,31,892 ஆக உள்ளது. 

இதுவரை மொத்தம் 4,44,59,040 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

முழு கட்டுரையைப் படிக்க →