இந்தியா

அமரீந்தர் சிங்குடன் ஜெ.பி.நட்டா சந்திப்பு!

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கை பாஜக  தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று சந்தித்துப் பேசியுள்ளார். 

DIN

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கை பாஜக  தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று சந்தித்துப் பேசியுள்ளார். 

பஞ்சாப் மொஹாலியில் உள்ள அமரீந்தர் சிங்கின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. பாஜக தேசிய துணை தலைவர் சவுதான் சிங்கும் உடன் சென்றுள்ளார். 

மாநிலத்தில் அரசியல் நிலவரம், அடுத்தகட்ட வளர்ச்சி உள்ளிட்டவை குறித்துப் பேசியதாக ஜெ.பி.நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இந்த சந்திப்பின்போது அமரீந்தர் சிங்கின் மனைவி ப்ரணீத் கவுர், மகள், மகன் ஆகியோர் இருந்தனர். 

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிதாக கட்சி தொடங்கிய அமரீந்தர் சிங் பின்னர் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 

பாஜக  தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, பின்னர் சண்டீகரில் அர்ஜுனா விருது பெற்ற துப்பாக்கி சுடும் வீரர் அஞ்சும் மவுத்கில் வீட்டிற்கும் சென்று அவரை சந்தித்துப் பேசினார். 

முன்னதாக, பாஜக அரசின் 9 ஆண்டு கால ஆட்சியின் நிறைவையொட்டி நேற்று(புதன்கிழமை) பஞ்சாப் ஹோஷியார்பூரில் ஜெ.பி.நட்டா மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT